முன்னாள் எம்.எல்.ஏ கார் திருட்டு..
மணப்பாறை பகுதியில் வசிக்கும் முன்னால் எம்.எல்.ஏ கார் திருட்டு, மற்றும் மணப்பாறையில் அடுத்த அடுத்த வீடுகளில் கொள்ளை திணறும் போலீசார், பொதுமக்கள் பீதி?
திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னால் அதிமுக MLA செ.சின்னசாமி, தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பண்ணீர்செல்லம் மனைவி துக்க நிகழ்வுக்கு செல்லவேண்டி காரை கழுவி சுத்தம் செய்துவிட்டு தனது வீட்டின் முன்பு கார் செட்டில் இன்னோவா காரை நிறுத்திவிட்டு உறங்க சென்று விட்டார், பின்னர் அதிகாலை தேனிக்கு செல்லவேண்டி 5 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தபட்டு இருந்த தனது இன்னோவா காரை காணவில்லை அதிர்ச்சி அடைந்த முன்னால் MLA இது பற்றி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்,புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதை போல் மணப்பாறை கலைஞர் வளைவில் உள்ள ராமலிங்கநகரில் அடுத்த அடுத்த மூன்று வீடுகளில் இருசக்கர வாகனம், லேப்டாப்,செல்போன்கள் கொள்ளை போனதாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள், புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர், அடுத்தடுத்து நடைபெரும் கொள்ளையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர், போலீசார் திணறி வருகின்றனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்