சுதந்திரத்தின் அமிர்தத் திருவிழா நிகழ்ச்சி.
சென்னை ராயபுரத்தில் உள்ள வட்டார யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சுதந்திரத்தின் அமிர்தத் திருவிழா நிகழ்ச்சி
மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு) சார்பாக 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சுதந்திரத்தின் அமிர்தத் திருவிழா, யுனானி மருத்துவம் சார்ந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டுதல், நோய் தடுக்கும் யுனானி மருந்து கமிரா மர்வரீத் மற்றும் மருத்துவ தாவரக் கன்றுகள் இலவச விநியோக நிகழ்ச்சி, சென்னை ராயபுரத்தில் உள்ள வட்டார யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் துணை இயக்குனர் திரு.N.ஜாஹிர் அஹமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர் முனைவர் திரு/க.பாண்டியன் (தேர்வு ஆணையர் சென்னை பல்கலைக்கழகம்) மற்றும் திரு/பார்த்திபன் (AWARENESS 76-ன் இயக்குனர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நோய் தடுக்கும் யுனானி மருந்து கமிரா மர்வரீத் மற்றும் மருத்துவ தாவரக் கன்றுகள் ஆகியவை முதியவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.