10 நாட்கள் குரு பூஜைக்கு பிறகு, புதிய ஆதீனத்தின் பீடோகரனம் நிகழ்ச்சி..!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக  இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதரால் அடுத்த வாரிசு என்று ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நித்தியானந்தா, தானே அடுத்த மடாதிபதி என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.