மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடி மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் திட்டம்: நிதியமைச்சர் பிடிஆர்

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

தொடர்ந்து, இன்று நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பதில் அளித்து பேசினார். அப்போது, கடந்த ஒன்றரை வருடமாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் திடீரென பள்ளிக்கு வந்தால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்கமுடியாத நிலை ஏற்படும்.

கற்றுக்கொள்வதிலும் சிரமம் இருக்கும். மேலும், தற்போது குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதை திருத்தம் செய்வதற்கு இந்த நிதியாண்டு முதல் நிதி ஒதுக்கீடாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.