பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் மூலம் விற்பனை அதிகரிப்பு: நிதியமைச்சர் பிடிஆர்

பெட்ரோல் விலை மீதான வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதன் காரணமாக அதன் பலன் நேரடியாக மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி 2021 – 2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 14 ஆம் தேதி வேளாண் துறைக்கான முதல் முறையாக தனியான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 4 நாட்களாக பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து, இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரையை வழங்கி பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில வரியால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி தகவல் கிடைப்பதில் கடினம் உள்ளதாகவும் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

பெட்ரோல் போட்டுக்கொண்டு மக்கள் பயணம்  மேற்கொண்டு பணிகளைச் செய்கின்றனர். இதனால் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால் நேரடியாக பயணை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததன் மூலம் நாள் ஒன்றுக்கு 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது, இதே நிலை நீடித்தால் நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசுக்கு ஒன்றுக்கு 3.55 கோடி வருமானம் கிடைக்கும், ஆண்டுக்கு 1200 கோடி ஒன்றிய அரசுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்கும்.