புகைப்பட கலையை அங்கீகரிக்க தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று..

பல சகாப்தங்களாக உலகைக் கவர்ந்த புகைப்பட கலையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த தினம் செயல்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புகைப்படத்தின் கலை நயத்தை கொண்டாடும் ஒரு வாய்ப்பை இந்த நாள் வழங்குகிறது. இந்த தினத்தை முன்னிட்டு போட்டோகிராபி துறையின் மீது உள்ள ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளும் புகைப்பட ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து உலகின் மற்ற பகுதிகளுக்கும் தங்கள் முறைகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த துறையின் படைப்பாற்றல் மற்றும் நுணுக்கங்களைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பல சகாப்தங்களாக உலகைக் கவர்ந்த இந்த கலை வடிவத்தைத் தொடர அதிகமான மக்களை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த தினம் செயல்படுகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் அட்வான்ஸ் டெக்னாலாஜியால் புகைப்படம் எடுக்கும் கலை காலப்போக்கில் ஒரு ட்ரெண்டை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இருந்ததை விட பயன்படுத்தப்பட்ட முறைகள், அழகியல், கோணங்கள் மற்றும் தரம் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும், புகைப்பட கலையின் மொழியும் சாரமும் அப்படியே இருக்கிறது. முதன் முதலில் படங்கள் மற்றும் விளக்கப்படங்களை மாற்றுவதற்கான புதிய நுட்பங்கள் வகுக்கப்பட்டு பின்னர் நகலெடுக்கப்பட்ட காலம் இருந்தது. பின்னர், கேமராக்கள் மற்றும் பிற கேப்டரிங் சாதனங்களிலிருந்து படங்கள் அச்சிடப்பட்டன. இப்போது, ​​நாம் மிக உயர்ந்த டிஜிட்டல் யுகத்திற்கு முன்னேறியுள்ளதால், ​​போட்டோகிராபி துறையில் ஆர்வமுள்ளவர்கள் எண்ணற்றோர் உள்ளனர்.

முதன்முதலில் 1837 இல் இந்த தினம் கொண்டாடப்பட்டது. லுாயிசு டாகுவேரே என்பவர், ஜோசப் நைஸ்போர் நீப்ஸுடன் இணைந்து டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். அவர்கள் Daguerreotype என்ற புகைப்பட செயல்முறையை உருவாக்கினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1839-ல் பிரெஞ்சு அறிவியல் அகாடமி அவர்களது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது. அதை ‘உலகிற்கு ஒரு பரிசு’ என்று அழைத்தது. பின்னர் பிரஞ்சு அரசாங்கம் Daguerreotype இன் காப்புரிமையை வாங்கியது.

இதை எடுத்துரைக்கும் வகையில், அன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. 1826ல் ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் , முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். அந்த புகைப்படம், நாளடைவில் அழிந்தது. பின்னர், 1839ல் லுாயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள போல்வர்டு கோவில் அருகிலுள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுதான். அதன்பிறகு, புகைப்படம் எடுத்தல் 1861 இல் வண்ணப் புகைப்படம் எடுத்தல் உட்பட பல முக்கிய மாற்றங்கள் புகைப்படத்துறையில் உருவானது.