பல வித இன்னல்களை சந்திக்கும் தாலிபான்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபானுக்கு பல பின்னடைவுகள் வரத் தொடங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள வளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. 

தாலிபான்களின் ஏழ்மை தொடரும்

சர்வதேச நாணய நிதியம் இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின்  சுமார் 9.5 பில்லியன் டாலர் அதாவது சுமார் 706 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. இதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் நாட்டு பணம் தாலிபான்களின் கைகளில் செல்லாமல் இருக்க, ஆப்கானிஸ்தானுக்கான நிதி வழங்கலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.