ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை – தாலிபான்

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.

ஆப்கானில் ஜனநாயக ஆட்சி கிடையாது

தலிபான்கள் அரசாங்கத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாலிபானின் மூத்த உறுப்பினர், “ஆப்கானிஸ்தானின் ஷரியா சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாங்கம் அமையும், அது ஜனநாயக முறையாக இருக்காது என திட்ட வட்டமாக தெரிவித்தார்

ஆப்கானிஸ்தான் (Afghanistan) ஆயுதப் படைகளைச் சேர்ந்த முன்னாள் விமானிகள் மற்றும் வீரர்களையும் ஆட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றக் காரணமான வீரர்க்களுடன், ஆப்கான் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றார். இராணுவத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ய,  சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அதற்கு, துருக்கி, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற ரணுவ வீரர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.