8 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.165 உயர்வு

கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்பனையான சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.25 அதிகரித்து தற்போது ரூ.875.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 8 மாதங்களில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.165 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.