130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea ரூ .130 க்கும் குறைவான வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.

Airtel ரூ 129 திட்டம்
ஏர்டெல் திட்டங்களைப் பொறுத்தவரையில் 100 ரூபாய்க்கும் குறைவாக அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் திட்டங்கள் எதுவும் இல்லை. மேலும் வேலிடிட்டியும் 14 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. 129 ரூபாய் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 1 ஜபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீரிம் செயலிகளின் உபயோகமும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது.

Reliance Jio ரூ 129 திட்டம்
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். 28 நாட்களுக்கு இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் மொத்தம் 2 ஜிபி டேட்டா (Data Plan) மற்றும் அனைத்து ஜியோ செயலிகளுக்கும் இலவச சந்தாவையும் பெறுவார்கள். மேலும், வாடிக்கையாளர் மொத்தம் 300 எஸ்எம்எஸ் மற்றும் எண்ணற்ற குரல் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

Vodafone-Idea ரூ 129 திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா, 300எஸ்எம்ஸ், இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். வோடபோன்-ஐடியா அதன் ரூ 129 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் எந்த OTT இயங்குதளம் அல்லது பயன்பாடுகளுக்கும் சந்தா வழங்காது.