ரசிகருக்கு பதிலளிக்க அர்ஜுன் தாஸ்
கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ஜுன் தாஸ் ரசிகர்களின் கேள்விக்கு அவ்வபோது பதிலளித்து வருகிறார். அதில் ரசிகர் ஒருவர் ‘தல எனக்கு ஒரு ஹாய் சொல்லுவீங்களா’ என்று கேட்டதற்கு, நான் முடிந்தவரை அனைவருக்கும் பதில் அளிக்க விரும்புகிறேன். ரசிகர்களுக்கு பதில் சொல்வதில் எந்த ஏற்றத்தாழ்வும் பார்ப்பதில்லை என்று பதிலளித்துள்ளார் அர்ஜுன் தாஸ். இதேபோல் கடந்த மாதம் உங்களுடைய குரலுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு ‘நிறைய முறை நடந்துள்ளது’ என்று பதிலளித்தார்.