தாலிபான் பத்திரிக்கையாளர் சந்திப்பு

வெறும் குரலாகவும் பெயராகவும் சபுஹுல்லாவை அறிந்திருந்த பத்திரிக்கையாளர்கள் நேற்று அவரது உருவத்தையும் பார்த்தார்கள். 

அமெரிக்கர்களையும் ஆப்கானிஸ்தானின் (Afghanistan) முந்தைய அரசாங்கத்தின் அதிகாரிகளையும் அடியோடு வெறுக்கும் சபிஹுல்லா முஜாஹித் என்ற ஒரு தாலிபான் தலைவர் தான் பல ஆண்டுகளாக உலகளவில் உள்ள பத்திரிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு தாலிபான் குறித்த செய்திக் குறிப்புகளை அளித்து வந்தார். செவ்வாய்க்கிழமை, தாலிபான்கள் வரலாற்றில் இடம்பெறவல்ல தங்கள் முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, இதுவரை வெறும் பெயராகவே அறியப்பட்ட சபிஹுல்லா முஜாஹித்தின் முகத்தை உலகம் கண்டது.

முன்னர், பல முறை செய்தியாளர்களை தொடர்பு கொண்டு சபிஹுல்லா பேசியபோதெல்லாம், அவ்வப்போது இதே பெயரில் பலர் மாறி மாறி பேசுகிறார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் ஒரு கருத்து இருந்தது. ஆனால், உண்மையில் அப்படி ஒரு நபர் இருக்கிறார் என்பது நேற்று தெளிவானது. இந்த மாத துவக்கத்தில் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்ட தாலிபான் அரசின் ஊடகங்கள் மற்றும் தகவல் மையத்தின் இயக்குநரது இருக்கையில் அமர்ந்து சபிஹுல்லா செய்தியாளர்களுடம் பேசினார்.