அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை கைப்பற்றிய தாலிபான்கள்

இந்த கருவியை நீண்ட காலமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ வீரர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பினர், மீண்டும் தங்கள் ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசில் பெண்களும் இடம்பெற வேண்டும் என்று தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பழிவாங்கல் நடவடிக்கை இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.