2025-க்குள் அனைத்து டூவீலர்களும் எலெக்ட்ரிக்காக இருக்க வேண்டும் – ஓலா

ஓலாவின் இணை நிறுவனரான பவிஷ் அகர்வால், இந்தியாவில் இறக்குமதி செய்ய விரும்பும் எந்த நிறுவனமும் (இந்திய அல்லது சர்வதேச நிறுவனங்கள்), இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ள நிலையில் மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2 வேரியன்ட்களில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரிய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ஜூலை 15 அன்று தனது மின்சார ஸ்கூட்டருக்கான முன்கூட்டிய ஆர்டர்களை எடுக்கத் தொடங்கிய ஓலா, முதல் 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புக்கிங்களை பெற்றதாக கூறுகிறது .