தாலிபான்.. பெண்களின் பாதுகாப்பு – மலாலா வேண்டுகோள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் தங்கள் கதவுகளை திறக்க வேண்டும் என்று மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாலிபான்கள் கொண்டுவந்துளனர். இதனால் அடுத்து அங்கு என்ன நிகழும் என்ற பதற்றம் உலக நாடுகளை தொற்றியுள்ளது. மத அடிப்படைவாதிகளான தாலிபான்களால் பெண்களின் முன்னேற்றம் தடைபட்டு போகும் என்றும், அவர்கள் முன்புபோல் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது ஆகியவை சாத்தியமில்லாமல் போகும் என்றும் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
பெண் கல்விக்காக குரல் கொடுத்துவருபவரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாயா யூசப்சையி பிபிசி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் நிலை குறித்து தான் மிகவும் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.