சென்னையில் இலவச WiFi வசதி

சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.  

சென்னையில் சீர்மிகு நகரம் திட்டம் உள்ளது. திட்டத்தின் கீழ் மொத்தம் 50 இடங்களை தேர்வு செய்து அதில் தற்போதைக்கு 46 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது .

அதன்படி தற்போது சென்னை மெரினா (Chennai Marina) கடற்கரை, அசோக்பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட 46 இடங்களில் WI-FI கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI (Free WIFI) ஐ மக்கள் பயன்படுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.