ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு ஈ விசா
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்தியாவுக்கான விசாவில் முக்கிய மாற்றங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தாலிபான்கள் நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது. அதன்படி மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்தியாவுக்கான விசாவில் ஒரு சில மாற்றங்களை மத்திய உள்துறை அமைச்சகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.