MBBS, BDS மற்றும் நர்சிங் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கியது

கொரோனா 2ம் அலையின் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த மருத்துவம் சார்ந்த  கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  மேலும், நேரடியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்திட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் 165 நாட்களுக்குப் பின் MBBS, BDS மற்றும் நர்சிங் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அந்த வகையில் இன்று முதல் இரண்டாம் ஆண்டு தொடங்கி நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்பு படித்து மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. 

மருத்துவக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.