மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிகிறது.