பிரிட்ஜை திறந்ததும் கொட்டிய பணம்

ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய பிரிட்ஜில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. போலீஸ்காரர்களிடம் பிரிட்ஜில் கண்டெடுத்த பணத்தை கொடுத்துவிட்டார். போலீஸில் ஒப்படைந்தாலும் அவருக்கு சன்மானமா ஒரு தொகை கைக்கு வந்து சேரும். அப்படி இருக்கு தென்கொரியா சட்டதிட்டம். தென்கொரியா சட்டப்படி ஒருவர் பணத்தையோ, பொருளையோ கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைக்கிறார் என்றால் கண்டெடுத்த நபரை முதலில் அதிகாரிகள் விசாரிப்பார்கள். இதன்பின்னர் பணத்தையோ, பொருளையோ உரியவரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். அப்படி அந்த பொருளுக்கு உரிமையானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அந்த பணத்தை கண்டெடுத்தவரிடமே அரசு ஒப்படைத்துவிடும்.