பிரதமர் மோடி டோக்யோ ஒலிம்பிக்ஸ் நட்சத்திரங்களுக்கு அளித்த காலை விருந்து
டோக்யோ ஒலிம்பிக்ஸ் நட்சத்திரங்களுக்கு காலை உணவு விருந்து அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலம் பிவி சிந்துவுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார். டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்திய மல்யுத்த வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய காலை உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.