ஒலிம்பிக்ஸ் தங்க மகன் அசைவ பிரியராக மாறிய கதை தெரியுமா
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவின் கடைபிடித்த உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து அறிந்து கொள்ளலாம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அளித்த பேட்டியில், நீரஜ் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். முன்பு சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த நீரஜ் சோப்ரா, 2016 ஆம் ஆண்டில் இறைச்சி சாப்பிட ஆரம்பித்தார். நீரஜ் 2016 ஆண்டு போலந்துக்குச் சென்ற போது, சைவ உணவு வகைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. இதன் காரணமாக, அவர் எடை குறைய ஆரம்பித்ததோடு, தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் பலவீனமாக உணரத் தொடங்கினார். இதன் காரணமாக அவர் அசைவ உணவுகளை சாப்பிட ஆரம்பித்தார்.