தமிழக சட்டபேரவையின் முதல் வேளாண் பட்ஜெட்
தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக அரசாங்கம் அளிட்த்ஹ தேர்தல் வாக்குறுதிகளில் தனி வேளாண் பட்ஜெட்டும் (Agriculture Budget) ஒன்றாகும். கர்நாடகா (Karnataka) மற்றும் ஆந்திராவுக்குப் (Andhra Pradesh) பிறகு, தமிழ்நாடு தனி விவசாய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் (M Karunanidhi) நிறுவப்பட்ட உழவர் சந்தை (Uzhavar Santhai) மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தி இருந்தார். பட்ஜெட் இதுபோன்ற பல சந்தைகளை மாநிலத்தில் நிறுவ முயற்சிக்கும்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் (Tamil Nadu Legislative Assembly) ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 வரை நடைபெறும்.