பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் திட்டம் ஒரு முக்கிய மைல் கல்

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி,  இது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டார்.

குஜராத்தில் முதலீட்டாளர் உச்சி மாநாடு பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டார்

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை நாட்டின் ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கும். சாலைகளில் ஓட பிட் ஆக இல்லாத வாகனங்களை அகற்றுவதில் இது பெரும் பங்கு வகிக்கும். மேலும் ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இது நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும் “என்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் கூறினார்.