தமிழக பட்ஜெட் 2021
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல், 100 நாள் வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்துதல், நகர்ப்புறங்களிலும் 100 நாட்கள் வேலைத் திட்டம், முதியோர் உதவித் தொகை- பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு ஆகியவையும் இருக்கக் கூடும்.
அத்துடன் நகர்ப்புறங்களிலும் 100 நாட்கள் வேலைத் திட்டம், முதியோர் உதவித் தொகை, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு, அரசின் வருவாயை பெருக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுக்கபடக்கூடும் என்று தெரிகிறது.
முன்னதாக தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முந்தைய அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்த வெள்ளை அறிக்கையில் (white paper report) உள்ள தகவலின்படி தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய். 2,63,976 கடன் சுமை கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.