காபூலை நோக்கி முன்னேறும் தாலிபான்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்தியர்களுடனும், இந்தியா தொடர்பில் இருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் கள நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் கூறினார்.
“ஆப்கானிஸ்தானின் நிலைமை கவலைக்குரியது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.