மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம்

டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும்.

2021-22 நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில், PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி LPG இணைப்புக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு கோடி கூடுதல் PMUY இணைப்புகள் (உஜ்வாலா 2.0 இன் கீழ்)  வழங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டத்தில் சேர்க்கப்படாத, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, டெபாஸிட் இல்லாமல் LPG இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும். மேலும், இந்த திட்டத்தில் பதிவு செய்ய குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படும். உஜ்வாலா 2.0 திட்டத்தில் பலம் பெயர் தொழிலாளர்கள்  ரேஷன் கார்டுகள் அல்லது முகவரி சான்றை சமர்ப்பிக்க தேவையில்லை. ‘குடும்ப உறுதின் ஆவணம்’ மற்றும் ‘முகவரி சான்று’ ஆகிய இரண்டிற்கும் ஒரு சுய வாக்குமூலமே போதுமானது.