சினிமாவில் கமல் 62 ஆண்டுகள்

திரைத்துறைக்கு வந்து நடிகர் கமல்ஹாசன் 62 ஆண்டுகள் ஆனதையொட்டி விக்ரம் படத்தின் புதிய புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 62 ஆண்டுகள் நிறைவேறிய உள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகங்களை வெளிப்படுத்தும் நடிகர் கமல்ஹாசன். 

இவர் கடந்த 1960 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில்தான் அறிமுகமானார். தற்போது கமல் ஹாசன் நடிக்க வந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, விக்ரம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ஒன்ஸ் எ லயன், ஆல்வேஸ் எ லயன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.