சல்மான் சந்தித்து வாழ்த்து பெற்ற மீராபாய் சானு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு, நடிகர் சல்மான் கானைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மீராபாய் சானு பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கானை (Salman Khan) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் “உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன்.மீராபாய் சானு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எப்போதும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்து நிச்சயம் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.