ஜிவி பிரகாஷ் – சீனுராமசாமி படத்தின் டைட்டில்
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது .
நடிப்பு, இசை என இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். அவர் நடிப்பில் தற்போது Bachelor என்ற திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. 2019ம் ஆண்டு வெளிவர வேண்டிய ஐயங்கரன் திரைப்படமும் இந்த மாதம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் ஜெயில், அடங்காதே திரைப்படங்களும் இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் BMW பைக்கில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார் ஜிவி பிரகாஷ். அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு என்ன பைக் பிடிக்கும் என்று கமெண்டில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜிவி, நமக்கு எப்பவுமே RX100 தான் என்று பதிலளித்திருந்தார். ஜிவி பிரகாஷின் இந்த பதில் RX 100 பைக் லவ்வர்ஸ் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.