ஒரே வாரத்தில் 8வது ஆப்கன் நகரை கைப்பற்றி மிரட்டல்!

ஆப்கானிஸ்தானின் ஃபாரா மற்றும் புல்-இ-கும்ரி நகரங்களை நேற்று (ஆக. 10) ஒரே நாளில் தலிபான்கள் கையகப்படுத்தியுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது அமெரிக்கா. இதனையடுத்து அங்கிருந்து அமெரிக்கா, பிரிட்டன் வீரர்கள் வெளியேறி வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் தலிபான்கள் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான தங்களின் சண்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக தலிபான்கள் வேகமாக முன்னேறத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகரங்களில், 8-ஐ தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.