Vodafone Idea அசத்தல் திட்டம் அறிமுகம்

ஒவ்வொரு இணைப்பிலும் வரம்பற்ற 4 ஜி டேட்டா கிடைப்பதோடு, புதிய ரெட்எக்ஸ் குடும்பத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும்  ப்ரைமரி மற்றும் செகண்டரி எண்களில் வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகின்றன. 

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா அளித்துள்ள அறிக்கையில், ‘பல குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலிருந்து வேலை, ஆன்லைன் கல்வி, பொழுதுபோக்கு மற்றும் சமூக ஊடக பயன்பாடு (Social Media) ஆகியவற்றுக்காக அதிக தரவைப் பயன்படுத்துகின்றனர். இந்த திட்டம் இவர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வரம்பற்ற தரவு கிடைக்கும். இதன் கட்டணத்துக்கான பில்லும் ஒன்றுதான் வரும்.’ என்று கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்

புதிய ரெட்எக்ஸ் குடும்பத் திட்டத்துடன், நெட்ஃபிக்ஸ் ப்ரைமரி மெம்பர் (ஓராண்டு சந்தாவுடன்), 1 வருடத்திற்கான அமேசான் பிரைம், 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி மெம்பர்ஷிப், வி.ஐ மூவிஸ் மற்றும் டிவி ஆகியவற்றுக்கான விஐபி அணுகல் போன்ற ஓ.டி.டி தளங்களுக்கான மெம்பர்ஷிப் கிடைக்கும். இதனுடன், Zee5 பிரீமியத்திற்கான அணுகலும் கிடைக்கும்.

வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்

ஒவ்வொரு இணைப்பிலும் வரம்பற்ற 4 ஜி டேட்டா (Data) கிடைப்பதோடு, புதிய ரெட்எக்ஸ் குடும்பத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும்  ப்ரைமரி மற்றும் செகண்டரி எண்களில் வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகின்றன. வோடபோன் ஐடியா அதன் போட்டியாளரான பாரதி ஏர்டெல் நிறுவனத்தைப் பின்பற்றி, தனது கார்பரெட் வாடிக்கையாளர்களுக்கு பிசினஸ் பிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் டேட்டா நன்மைகளைக் குறைத்த சில நாட்களிலேயே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.