வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்.

வருகிற 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, வேளான் பட்ஜெட் குறித்து அரசின் மீது உள்ள எதிர்பார்ப்புகள் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவான எதிர்பார்ப்புகள்:

– வேளான் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது விவசாயத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் 2.5 சதவிகிதமாக உள்ளது. இது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கைக்கு விகிதாசார முறையில் முற்றிலும் பொருந்தாமல் உள்ளது.

– வேளான் துறைக்கான ஒதுக்கீடு அந்த துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் மற்றும் துறைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

– ரேஷன் கடைகளில் (Ration Shops), இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த நிலைமை இருப்பது பரிதாபமாக உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.