முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாக கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான சிலரது வீடு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சராக இருந்தபோது  அரசு ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் சென்னை மாநாகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாயும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 346 கோடி ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.