2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான்

கடல்மட்ட அளவு குறைந்தபட்ச அளவில் 55 செமீ ஆகவும், அதிகபட்ச அளவில் 76 செமீ ஆகவும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, மும்பை போன்ற கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 2050 ஆண்டுக்கு பிறகு தான் புவியின் வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது உள்ள சூழலில் 2030 ஆண்டில் இருந்தே புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் என IPCC எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இனி பல்வேறு பேரிடர்கள் ஏற்படும் எனவும் புயல் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2040ம் ஆண்டுக்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 சதவீதம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து பருவநிலையை பேணும் முயற்சிகளை ஒன்றாக மேற்கொண்டால், 2100ம் ஆண்டுவாக்கில் இந்த 1.5 சதவீத வெப்பநிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக தெற்காசியாவில் அதிக வெப்பநிலை, இயற்கை பேரிடர்கள், காட்டுத்தீ, புயல், வெள்ளம் போன்றவை இந்த நூற்றாண்டில் சாதாரண ஒன்றாக மாறிவிடும். இமாலய பனிமலையில் அதிகளவில் பனிக்கட்டிகள் உறையும் இதன் காரணமாக வரும் பத்தாண்டுகளில் ஆறுகளில் நீரோட்டம் அதிகரிக்கும். இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் பனிமலை வெடிப்புகள், பனிக்கட்டி சரிவுகள் அதிகம் ஏற்படும்.