விவசாயிகளுக்கு இன்று ஹேப்பி நியூஸ்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை இன்று பிரதமர் விடுவிக்கிறார்.

நாட்டின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பொருட்டு, பிரதமர் (Prime Minister Narendra Modi) நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டில் பிரதமர் கிசான் யோஜனாவைத் தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ரூ .6,000 பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த தொகை நான்கு மாத இடைவெளியில் தலா ரூ .2,000 என மூன்று தவணைகளில் விவசாயிகள் கணக்கில் அனுப்பப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் (PM Kisan) இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் வரையில் 68.76 கோடி பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.