நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 தற்போது நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன் சரசையான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை குறித்து சர்ச்சையாக பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் கூறியிருந்தார். மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். 

தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், பல்வேறு கட்சியினர் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சாதிய ரீlதியாக பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை கூறியுள்ளது.