இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுகள்.

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தற்போது பரிசுகள் அனைத்து தரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன.  ஹரியானா அரசு சார்பில் 6 கோடி ரூபாய் ரொக்கம், அரசு வேலை மற்றும் வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில் இருந்து 11 பேர் பங்கேற்றனர்.  சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தற்போது பரிசுகள் அனைத்து தரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன.  ஹரியானா அரசு சார்பில் 6 கோடி ரூபாய் ரொக்கம், அரசு வேலை மற்றும் வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் அரசு சார்பில் 2 கோடி ரொக்கம், மணிப்பூர் அரசு சார்பில் ஒரு கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக ஒரு கோடி, பிசிசிஐ சார்பாக ஒரு கோடி, எலன் குழுமம் சார்பில் 25 லட்சம் என்று பலர் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகளை அள்ளி வழங்கியுள்ளன.