தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் முதல்முறையாக போட்டோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..
தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் தான் இருக்கும் போட்டோவை சமீபத்தில் சந்தோஷி சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார்.
பல்வேறு ஹிட் சீரியல்களை சின்னத்திரை ரசிகர்களுக்காக ஒளிபரப்பி வரும் சன் டிவி-யில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை சந்தோஷி. சின்னத்திரையில் மட்டுமன்றி வெள்ளித்திரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளர். இவரை சட்டென்று அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா படத்தில், ஹீரோயின் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்திருந்தந்தை நினைவு கூறலாம்.
முதன் முதலாக கடந்த 2000-ம் ஆண்டில் பெண்கள் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானாலும், சினிமா மற்றும் சீரியல் என இரண்டு ஸ்கிரீனிலும் ஏராளமான வேடங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையை பொறுத்தவரை கடந்த 2001-ம் ஆண்டு ஒளிபரப்பான வாழ்க்கை சீரியலில் நடித்தார். அதன் பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பான பல சீரியல்களில் கடந்த 2017-ம் ஆண்டு வரை நடித்துள்ளார். வாழ்க்கை சீரியலை தொடர்ந்து சன் டிவி-யில் ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மரகதவீணையில் திவ்யா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவை தவிர ஜெயா டிவி-யில் ஒளிபரப்பான அண்ணி சீரியலிலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான அம்மு சீரியலிலும், கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான சூரியபுத்ரி, வாடகை வீடு சீரியல்களிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான பாவ மன்னிப்பு, கேப்டன் டிவி-யில் ஒளிபரப்பான இல்லத்தரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.