Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா?

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடனான உரிம ஒப்பந்தத்தின் கீழ் SII நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் கோவிஷீல்டின் தற்போதைய உற்பத்தி திறன் மாதத்திற்கு 130 மில்லியன் டோஸ் என்று உள்ள நில்லையில், அதை மேலும் அதிகரிக்க முயற்சிக்கிறது என்று ஆதர் பூனவல்லா கூறினார். மேலும், பூனாவல்லா உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாடாளுமன்றத்தில் சந்தித்தார், இருவருக்கும் இடையிலான சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

சந்திப்பிற்கு பிறகு  PTI  நிறுவனத்திடம் பேசிய அவர் “அரசு எங்களுக்கு உதவுகிறது. நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. அனைத்து ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ”என்று கூறினார்.

முன்னதாக, பூனாவல்லா சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் சந்தித்தார். பூனாவல்லாவுடன் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடத்தியதாக  மத்திய சுகாதார அமைச்சர் ட்வீட் செய்தார். COVID-19 தொற்று பரவலை கடுப்படுவதில், நிறுவனம் அளிக்கும் பங்கை நான் பாராட்டினேன். தடுப்பூசி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தேன்” என்று மாண்டவியா கூறினார்

கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என உள்ள நிலையில், இந்தியாவில், கோவேக்ஸின், கோவிஷீல்ட் தவிர, ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும், போடப்பட்டு வருகிறது.