முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு தினம்!
தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர்
கலைஞர் கருணாநிதி யின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரவர் பகுதிகளில் மிகவும் எளிமையாக கருணாநிதி திருவுருவ படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வர் திரு/ மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பகுதியில் புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு/ த.ஜெயக்குமார், தலைமையில்,
K. செல்வராஜ் ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் முன்னிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்,
கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கலைஞரின் மூன்றாம் ஆண்டு
நினைவு நாள் பொழிச்சலூர் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
செய்தி: S.ரவூப்