மிகச்சிறந்த வட்டியை அளிக்கும் வங்கி.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி YES வங்கி தனது FD விகிதங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி அளிக்கின்றது.  பெரிய அளவிலான அரசு மற்றும் தனியார் வங்கிகளைப் பற்றி பேசுகையில், YES Bank தற்போது FD-யில் அதிக வட்டி அளிக்கின்றது.

7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுக்கான FD-க்கு, ஐசிஐசிஐ வங்கி 2.50% முதல் 5.50%, HDFC வங்கி 2.50% முதல் 5.50%, ஆக்சிஸ் வங்கி 2.50% முதல் 5.75% வரையிலான ஆண்டு வட்டியை அளிக்கின்றன. இதில், ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது. வங்கிகளின் நிலையான வைப்பு (Fixed Deposit) / கால வைப்பு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.

முதலீட்டில் எந்த வித ஆபத்தையும் எதிர்கொள்ளாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழியாகும். 5 வருட வரி சேமிப்பு FD களில் பிரிவு 80C இன் கீழ் வரி சேமிப்பு நன்மைகள் கிடைக்கின்றன. இருப்பினும், FD இலிருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது.