கோயில்களில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை.
தமிழகத்தில் கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும் என்றும், பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சேகர்பாபு முன்னதாக கூறியிருந்தார். இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அதன்படி இன்று முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 47 திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது.
அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள குருக்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பதாகைகளில் வைக்கப்பட்டுள்ளன. தமிழில் அர்ச்சனைசெய்ய விரும்பும் பக்தர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.