Komaki XGT X5 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோமகி நிறுவனம், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக XGT-X5 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

புதுடெல்லி: கோமகி நிறுவனம், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக XGT-X5 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரிவுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் (Scooter) அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு முன்னரே இந்த ஸ்கூட்டர் 1000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

ஒரு ஊடக அறிக்கையில், இந்த மாடல் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கிறது என்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதை இலவசமாக முன்பதிவு செய்யலாம் என்றும் கோமகி தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து அருகிலுள்ள டீலர்ஷிப் பிரிவு, வாடிக்கையாளரை தொடர்பு கொள்ளும் என்றும் நிறுவனம் தெரிவித்தது. கோமகி அதன் மின்சார வாகனங்களை வாங்குவதற்காக EMI வசதியையும் வழங்குகிறது.