தனது அப்பாவின் பெயர் மகனுக்கு வைத்திருக்கும் சிவகார்த்திகேயன்!
சின்னத்திரையில் தோன்றி பெரியத்திரையில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் தனது உறவினரான ஆர்த்தியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார்.
பின்னர் இரண்டாவது முறையாக கருவுற்ற சிவகார்த்திகேயன் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்தது.
18வருடங்களுக்குப் பிறகு என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.அப்போதே அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது மகனுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் செம வைரலாகி வருகிறது. இந்த நிலையில், மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், மகனுக்கு ‘குகன் தாஸ்’ என்று பெயரிட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.
திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
செய்தி: S.ரவூப்