கொடைக்கானலில் தொடங்கியது அத்திப்பழ சீசன்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் சீசன் இந்த ஆண்டு அமோகமாக தொடங்கியுள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மருத்துவ குணம் அதிகம் உள்ள அத்திப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. விளைச்சல் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் லாபமும் தருகின்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இதனை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் (Kodaikanal) கீழ் மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு, அணுக்கம், பெருமாள் மலை, பேத்துப்பாறை போன்ற பகுதிகளில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் அதிகளவில் விளைகிறது.
இந்தப் பழங்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் விளைந்து வருகின்றன. மருத்துவ குணமும் அதிகம் உள்ளதால் இப்பழத்திற்கான தேவையும் பெருகி வருகிறது.
மருத்துவர்களின் படி இப்பழத்தினை நாம் அன்றாடம் எடுத்துக்கொண்டால், நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். இது தவிர சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் அத்திப்பழம் கட்டுப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.