CBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளிவருகின்றன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று மதியம் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று மதியம் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE -யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in, cbse.gov.in.- ல் இன்று மதியம் 12 மணிக்கு 2021-ஆம் ஆண்டின் 10 ஆம் வகுப்பு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இது தவிர Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
12 ஆம் வகுப்பைப் போலவே, இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுகான தேதி மற்றும் நேரத்தை வாரியம் அறிவித்தது. 10 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக, CBSE இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்தது. உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.