தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் போலி ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது அம்பலம்

போலி ஓட்டுநர் உரிமம் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலி ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அம்பலமாகி இருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஒருவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்றபோது, அதே எண் வேறு ஒருவருக்கும் வழங்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

ஐந்து ஆர்டிஓ அலுவலகங்கள் மட்டுமே இதற்கு பதிலளித்திருந்தன. அவற்றின் மூலம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 260 போலி ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

திருச்செந்தூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 1077 போலி உரிமங்களும்,கடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 4817 போலி உரிமங்களும், அரியலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 4534 போலி உரிமங்களும்,தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 3 260 போலி உரிமங்களும் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.