CSG vs DD; சேப்பாக் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சேப்பாக் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். 

முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினர். கவுசிக் காந்தி 45 ரன்னும், ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் சார்பில் சிலம்பரசன் 2 விக்கெட், ரங்கராஜ் சுதேஷ், விக்னேஷ், ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்து இருந்தார். 

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 39 ரன்னில் அவுட்டானார்.  திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து இருந்தது. இதனால் சேப்பாக் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெற்ற 2வது வெற்றி ஆகும்.