6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி

சேலம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

முதலில் பேட் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 21 ரன்கள் எடுத்தார். அக்சய் சீனிவாசன் 19 ரன்களும்,  அபிஷேக் 14 ரன்களும், கேப்டன் டேரில் பெராரியோ 14 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அதன்படி துவக்க வீரர்கள் சந்தோஷ் ஷிவ் 6 ரன்கள், அமித் சாத்விக் 18 ராம்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகமது அத்னன் கான் 13 ரன்களிலும், நிதிஷ்  ராஜகோபால் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஆதித்ய கணேஷ் (28), அந்தோணி தாஸ் (24) கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திருச்சி அணி கேப்டன் ரகில் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சி அணி  இதுவரை 6 லீக் போட்டிகளில்  விளையாடி உள்ளது.  இதில் 4 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.